தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-கவிதை

Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Monday, November 5, 2018

அம்மா,

அம்மா

"அடி முடி தேடினாலும் 
அகராதியை புரட்டினாலும் 
முழுமையாக அர்த்தம் புரியாத 
உயிருள்ள  சித்திரம் 
அம்மா "

Tuesday, May 23, 2017

அம்மா


உன்னுள் நான் இருக்க
பார்த்து பார்த்து என்னை
பக்குவமாய்……


பெற்றெடுத்-தாய்……………!!
தவறி விழுந்து நான்
அழ
காரணமின்றி நீ அழு-தாய்…………….!!
எனக்கு உணவூட்ட
நீயும் குழந்தை ஆனாய்……….!!
அப்பா என்னை அதட்ட
அவரை நீ மிரட்டினாய்……!!


தாய் மட்டும் அல்ல
முதல் தோழியும் நீதான்………!
அன்பின் உண்மையும்
காதலின் அர்த்தமும்
உன்னிடம் கற்றுக்கொண்டேன்………!!
அன்று நீ  தந்த
தண்டனைகளின்  அர்த்தத்தை
இன்று புரிந்து கொண்டேன்………!!
என்னை சுமந்த உன்னை
நான் சுமக்க விரும்ப வில்லை………….


நான்கு பேர்  என்னை  சுமக்கும் வரை
என்னுடன் நீ இரு
அது போதும்…...

Monday, May 22, 2017

அம்மா


அம்மா 

அம்மா நான் வீழ்ந்தபோதெல்லாம்ஓடிவந்து 
 அணைத்துக்கொள்ளும் அன்பின் 
உருவம் நீ 
கைபிடித்து ,நல்லவை தீயவை
யாவையும் அறியத்தந்தவள் நீ 
நான் உயரும் போதெல்லாம் 
 என் உயர்வு கண்டு பெருமிதம் 
கொண்டவள் நீ 
உன் அன்பு வற்றாதநதியாய் என்றும் 
எனக்குள்ளே......



எழுதியவர்  
திருமதி சிவக்குமாரி  சாந்தன்  
(sindelfingen Germani)

Sunday, May 21, 2017

அம்மா


Tuesday, November 19, 2013

அம்மா



Friday, November 15, 2013

அம்மா

அண்டத்திலிருந்து அகிலம் 
தாண்டி சென்றாலும் 
நான் அனைவரும் 
அரை நொடியில் காணும் 
சொர்க்கம் அன்னையின் மடியே 
வீடு 
வந்த கையோடு
வாவென்று அரவணைத்து
இன்னமுது ஊட்டுவாளே
ஈன்ற அன்பு போல
பாசத்தை கூற நான் கண்ட
உவமை
வரட்சியில் உழவனின்
வேண்டுதலுக்கு
கிடைத்த அற்புதமான அமுத சுரவியான
மழையே
மலை போல அன்பை
எப்போதும் எதிர்பார்க்காமல்
பொழிவாளே ..என்று எப்போதும் நான் கண்ட தெய்வம்
தாய் தானே