தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-கவிதை

Saturday, November 17, 2012

இறந்து விடுகிறேன் ...........


இறந்து விடுகிறேன் ...........


கடல் தாண்டி காடு மேடு 
பூராகவும் 
கல்லாய் வாழும் 
மனிதர்கள் போல நானும் 
எல்லாவற்றையும் விட்டு 

எமனுடன் வாழ்கின்றேன்
எதிரிகள் யாருமில்லை
ஆனாலும்
என்னை பெற்றவளும் என்னருகிலில்லை
என்னக்கென்று
என்னோடு வாழ எவளும் இல்லை
இறைவா
எது தான எனக்கு நீர் தந்த
இடை விடா சந்தோசம் !!!!!
வேண்டாமையா
இப்பிறப்பு இப்போதே
இறந்து விடுகிறேன் 


குட்டி கவி


சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday, November 13, 2012

ஏன் இந்த வேஷம்


ன் இந்த வேஷம்

சரளமாக ஓடும் 
புகை வண்டி சில்லு போல 
உருளுகின்றேன் உன் மீது 
தினமும் உன் நினைவுகளுடன் 
பரிதாபமாக இருந்தோம் 

இருவரும் எம்மை பார்ப்பவர்
மத்தியில்
பரிதவிக்கின்றேன் பார்வையாலே
இப்போது என் விழிகளை
காற்றினில் விட்டு
ஆனாலும் உன் விழிகள் மட்டும்
என்னை பொம்மலாட்டம் போல
தலையாட்ட வைத்ததே எல்லாவற்றுக்கும்
நானும் தற்பெருமை இன்றி
தன்னம்பிக்கை இல்லாமல் தரம் குறைந்தேன்
உன்னால் தினமும்
ஒரு நாள் வந்தாய்
பௌர்ணமியில் வந்த நிலா போல
எங்கே சென்றாய் என்னை விட்டு
வெகு தூரம்
ஏமாளியாக மாறிவிட்டேன்
எத்தனை நாட்களுக்கு
இந்த வேஷம்


குட்டி கவி

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்