தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-கவிதை

Wednesday, August 2, 2017

தொந்தி பெருத்து இன்று சந்தி சிரிக்கும்படியாச்சுதம்மா

நிலங்கொத்தி வயலுழுது நீரிறைத்து நிதமுழைத்து
நலஞ்சிறக்க வாழ்ந்தகதை தான் மறந்தோம் – சுலபத்தில்
எஞ்சின் பிடித்து அதில் ஏறிநின்று ஏப்பம் விடப்
பஞ்சாய்ப் பறக்கும் உயிர்.

நெல்லுக்குத்தி மாவெடுத்து மருந்தாக்கி நோய்நொடியை

மல்லுக்கட்டி நின்ற எங்கள் மாதரெல்லாம் – பொல்லாத
சீரியலில் குந்தியவர் சிந்தை தொலைத்ததனால்
காரியமே கெட்டதென்று காண்.

கள்ளத்தீன் தின்றுகள்ளோடு களியுண்டு

வெள்ளத்தில் அடியுண்டவிலங்கானோம் – உள்ளத்தால்
உணர்ந்து உடல்நிலையைில் ஊக்கம் எடுத்துநலம்
கொணர்ந்தால் நமக்கு நலன்.

வெளிநாட்டான் சாப்பாடு விதவிதமாய்ச் சாப்பிட்டு

களியாட்டம் போடுவதைக் கைவிட்டு – துளியேனும்
உடலை வருத்தியதில் ஊளைச்சதை குறைந்துவிட்டால்
சுடலை வெகு தூரம் சுகம்.

பந்திக்கு முந்தியதில் தொந்தி பெருத்து இன்று

சந்தி சிரிக்கும்படியாச்சுதம்மா – சிந்தித்தால்
சீக்கிரமே சித்தம் தெளிந்து தினமுழைத்தால்
ஆக்கினைகள் தீரும் அறி.

உடல் பெருக்கும் மூச்சுமுட்டும் சோம்பல் தலைசுற்றும்

திடம்குலைந்து போகும் நிலை தோன்றும் – குடம்போன்ற
தண்ணீரீல் துளிவிஷம்போல் கொலஸ்ரோல் உயிர்குடிக்கும்
எண்ணீர்எடுத்தெறிதல் ஏன்.

காய்த்தமரத்தைக் கனியமுன்னே கருக்கிவிடும்.

நோய்க்கான காரணங்களை கேட்டீர் – ஆய்ந்து அவை
விலக்கி விருந்துண்டு வியர்வைசிந்தி உழைத்தலொன்றே
கொலஸ்ரோலைக் கொல்லும் வழி.

Monday, May 29, 2017

காலைவணக்கம்

பகலோனின்மெல்லிய ஒளிக்கீற்று 
பூமியவள் மேனிதளுவ.... 
புல்வெளிகள் சிலிர்த்து நிற்க..... 
உயிரினங்கள் சோம்பல்முறித்து, இசைபாட........ 
தென்றலின் வருடலோடு.....
கூடிய காலைவந்தனங்கள்

Sunday, May 28, 2017

அன்பு

கோபம்எனும் இருட்டில்விழுந்து 
விடாதே...எனெனில் 
அன்பெனும்பகல் கண்ணுக்குத் 
தெரியாமல் பேய்விடும்....... 

எழுதியவர்  
திருமதி குமாரி  சாந்தன்  
(sindelfingen Germani)

Saturday, May 27, 2017

முயற்சி

மூச்சு விட மறந்தாலும் 
 முயற்சி செய்வதை மறந்து விடதே.... 


எழுதியவர்  
திருமதி குமாரி  சாந்தன்  
(sindelfingen Germani)

Friday, May 26, 2017

மௌனம்,





வாயிருந்தும்  பேசமுடியவில்லை 
                       அவன் 
கண்கள்  பேசிக்கொண்டிருப்பதால்  --


எழுதியவர்  
திருமதி குமாரி  சாந்தன்  
(sindelfingen Germani)

Thursday, May 25, 2017

காதல்,

நிலா தொலைந்த 
இரவிலும் ,
நிசப்த அலை 
வரிசைகளிலும், 
உன் 
மெளனத்தை 
நான் மொழிபெயர்த்து 
பார்க்கிறேன் ..!!!


எழுதியவர்  
திருமதி குமாரி  சாந்தன்  
(sindelfingen Germani)

Wednesday, May 24, 2017

சொற்கள்




சொற்கள்  தேனீயை  போன்றது
அவற்றில் தேனும்  உண்டு
கொடுக்கும் உண்டு


எழுதியவர்  
திருமதி குமாரி  சாந்தன்  
(sindelfingen Germani)

Tuesday, May 23, 2017

அம்மா


உன்னுள் நான் இருக்க
பார்த்து பார்த்து என்னை
பக்குவமாய்……


பெற்றெடுத்-தாய்……………!!
தவறி விழுந்து நான்
அழ
காரணமின்றி நீ அழு-தாய்…………….!!
எனக்கு உணவூட்ட
நீயும் குழந்தை ஆனாய்……….!!
அப்பா என்னை அதட்ட
அவரை நீ மிரட்டினாய்……!!


தாய் மட்டும் அல்ல
முதல் தோழியும் நீதான்………!
அன்பின் உண்மையும்
காதலின் அர்த்தமும்
உன்னிடம் கற்றுக்கொண்டேன்………!!
அன்று நீ  தந்த
தண்டனைகளின்  அர்த்தத்தை
இன்று புரிந்து கொண்டேன்………!!
என்னை சுமந்த உன்னை
நான் சுமக்க விரும்ப வில்லை………….


நான்கு பேர்  என்னை  சுமக்கும் வரை
என்னுடன் நீ இரு
அது போதும்…...

Monday, May 22, 2017

அம்மா


அம்மா 

அம்மா நான் வீழ்ந்தபோதெல்லாம்ஓடிவந்து 
 அணைத்துக்கொள்ளும் அன்பின் 
உருவம் நீ 
கைபிடித்து ,நல்லவை தீயவை
யாவையும் அறியத்தந்தவள் நீ 
நான் உயரும் போதெல்லாம் 
 என் உயர்வு கண்டு பெருமிதம் 
கொண்டவள் நீ 
உன் அன்பு வற்றாதநதியாய் என்றும் 
எனக்குள்ளே......



எழுதியவர்  
திருமதி சிவக்குமாரி  சாந்தன்  
(sindelfingen Germani)

Sunday, May 21, 2017

அம்மா


Saturday, May 20, 2017

பிரிவு,


உறவின் கண்ணீர்
 முடிவில் 
காதலின்
கண்ணீர் 
பிரிவில் --------?