தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-கவிதை

Tuesday, July 5, 2011

தனிமையாக வாழ்ந்திடுவேன் ..............


தனிமையாக வாழ்ந்திடுவேன் ..............
கொத்து கொத்தாய் 
போட்ட 
கொத்து குண்டு போல 
என் மனம் சிதறிவிட்டதடி
வரைந்து வைத்த உருவம் போல 
கண்ணாடி என்னையே காட்டுகிறதே 
காலம் பூராகவும் உன்னை காட்டுமென 
காத்திருந்தேன் 
ஆனால் 
வாடிப்போன மலரைப்போல 
மாறிவிட்டதே என் உயிரடி 
மணல் வீடு தான் கட்டியிருந்தேன் 
காதலில் 
ஆழ்கடல் அலை போல புரட்டி 
எடுத்தாயே எனது இதயகூட்டை 
கும்பிட்டு கேட்கிறேன் 
கோமாதா உன்னை ..கோலமிடும் 
பெண்ணும் வேண்டாம் 
கோகுலம் போற்றும் கோதையும் வேண்டாம் 
சாகும் வரை தனிமையாக வாழ்ந்திடுவேன் 
கடைசி வரை மனித பிறப்பு வேண்டவே 
வேண்டாம் 

எழுதியவர் - குட்டி கவி

Saturday, February 26, 2011

Wednesday, February 16, 2011

Saturday, January 15, 2011

Friday, January 14, 2011

மரண படுக்கையின் மகத்துவம்


மரண படுக்கையின் மகத்துவம் 

மதியாதோர் கூட
மதிப்பார் அனைவரையும்
மரணப்படுக்கையின் பின்னே
மயானம் போனால்
மாண்டவர்கள் பல கோடி

யார்தான் மனதில் வைத்திருக்கின்றார்
அவரவர் சொந்தங்களை கூட
உலகிலுள்ள அத்தனை நாட்டிலுமே
அமைதியான இடங்கள் கேட்டேன்
அத்தனையும் அமைதியான இடம்
அல்ல
நிம்மதியும் கலந்த அமைதியான
அனைவருமே பாசம் காட்டுவதற்கு
காலம் பூராகவும் கல்வெட்டுடன்
கூடியது
மயானங்களே....
எவருக்கும் சாக பிடிப்பதில்லை
சரித்திரத்தின் சத்தியத்தின் படி
யாவருமே அங்கு அடைக்கலம்
தேடிக்கொள்வோம் .
யாரென்று தான் தெரியவில்லை
முதலில் ......

எழுதியவர் - குட்டி கவி

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்

Thursday, January 13, 2011

தாய்........


தாய்........

அண்டத்திலிருந்து அகிலம் 
தாண்டி சென்றாலும் 
நான் அனைவரும் 
அரை நொடியில் காணும் 
சொர்க்கம் அன்னையின் மடியே 

வீடு
வந்த கையோடு
வாவென்று அரவணைத்து
இன்னமுது ஊட்டுவாளே
ஈன்ற அன்பு போல
பாசத்தை கூற நான் கண்ட
உவமை
வரட்சியில் உழவனின்
வேண்டுதலுக்கு
கிடைத்த அற்புதமான அமுத சுரவியான
மழையே
மலை போல அன்பை
எப்போதும் எதிர்பார்க்காமல்
பொழிவாளே ..என்று எப்போதும் நான் கண்ட தெய்வம்
தாய் தானே


குட்டி கவி

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, January 12, 2011

பூக்கள்

அள்ளித்தந்த பூக்கள் மாலையாகிறது
அள்ளித்தந்த வார்த்தைகள் கவிதையாகிறது

புதன்கிழமை வாழ்த்துக்கள்

orkut scrap

Tuesday, January 11, 2011

Monday, January 10, 2011

கண்னீர் விடும் காதலர்கள்

அன்று
சின்னச்சின்ன பார்வைகளால்
நீ தந்த காதல்..

இன்று
உன் சின்னச்சின்ன வார்த்தைகளால்
உடைந்து போனது ஏன்?


குட்டி கவி

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday, January 9, 2011

பூக்கள்




காதலிக்கும் போது பூக்கள் தூதாகின்றன!!
கல்யாணத்தின் போது அந்த பூக்கள்
மாலையாகின்றன..

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday, January 8, 2011

தாயின் மணிக்கொடி

தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!


சரணங்கள்
1.
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன்
உச்சியின் மேல்‘வந்தே மாதரம்’என்றே
பாங்கின் எழுதித் திகழும்-செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)
2.
பட்டுத் துகிலென லாமோ?-அதில்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகந்தடித் தாலும்-அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம் (தாயின்)
3.
இந்திரன் வச்சிரம் ஓர்பால்-அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்,-(தாய்)
மந்திரம் நடுவுறத் தோன்றும்-அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)
4.
கம்பத்தின் கீழ்நிற் றல்காணீர்-எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியர்அவ் வீரர்;-தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார் (தாயின்)
5.
அணியணி யாயவர் நிற்கும்-இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும்-விறல்
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்)
6.
செந்தமிழ் நாட்டுப் பொருநர்,-கொடுந்
தீக்கண் மறவர்கள், சேரன்தன் வீரர்,
சிந்தை துணிந்த தெலுங்கர்,-தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)
7.
கன்னடர் ஒட்டிய ரோடு-போரில்
காலனும் அஞ்சக் கலக்கு மராட்டர்,
பொன்னகர்த் தேவர்க ளொப்ப-நிற்கும்
பொற்புடை யார்இந்துஸ் தானத்து மல்லர். (தாயின்)
8.
பூதலம் முற்றிடும் வரையும்-அறப்
போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்,
மாதர்கள் கற்புள்ள வரையும்-பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்)
9.
பஞ்ச நதத்துப் பிறந்தோர்-முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினும் தாயின்-பதத்
தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும். (தாயின்)
10.
சேர்ந்ததைக் காப்பது காணீர்!-அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத-நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க!

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday, January 7, 2011

கிளிப்பாட்டு



திருவப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்து,
வருக வருவதென்றே-கிளியே!-மகிழ்வுற் றிருப்போமடி!


வெற்றி செயலுக் குண்டு தியின் நியமமென்று,
கற்றுத் தெளிந்த பின்னும்-கிளியே!-கவலைப்படலாகுமோ?


துன்ப நினைவு களும் சோர்வும் பயமு மெல்லாம்,
அன்பில் அழியுமடீ!-கிளியே!-அன்புக் கழிவில்லை காண்.


ஞாயிற்றை யெண்ணி யென்றும் நடுமை நிலை பயின்று,
ஆயிர மாண்டுலகில்-கிளியே!-அழிவின்றி வாழ்வோ மடீ!


தூய பெருங்கனலைச் சுப்பிர மண்ணி யனை
நேயத்துடன் பணிந்தால்-கிளியே!-நெருங்கித் துயர் வருமோ?     

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday, January 6, 2011

பாப்பாப் பாட்டு


ஓடி விளையாடு பாப்பா!-நீ
ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா!-ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!


சின்னஞ் சிறுகுருவி போலே-நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு-நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!


கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!


பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது
மனிதர்க்கு தோழனடி பாப்பா!


வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!


காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு
கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு-என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!


பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருன
தீங்குவர மாட்டாது பாப்பா!


பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!


துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!


சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!


தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!


சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!


வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்ப!


வேத முடையதிந்த நாடு,-நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு;
சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!


சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்.


உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;-இது
வாழும் முறைமையடி பாப்பா!     

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, January 5, 2011

சந்திரமதி

பச்சைக் குழந்தை யடி!-கண்ணிற்
பாவை யடி சந்திரமதி!
இச்சைக் கினிய மது!;-என்தன்
இருவிழிக்குத் தே நிலவு;
நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே-நல்ல
நாகமணி யுள்ளதென்பார்;
துச்சப்படு நெஞ்சி லே-நின்தன்
சோதி வளரு தடீ!

பேச்சுக் கிடமே தடி!-நீ
பெண்குலத்தின் வெற்றி யடி!
ஆச்சர்ய மாயை யடி!-என்தன்
ஆசைக் குமாரி யடி!
நீச்சு நிலை கடந்த-வெள்ள
நீருக் குள்ளே வீழ்ந்தவர்போல்,
தீச்சுடரை வென்ற வொளி-கொண்ட
தேவி!நினை விழந்தேனடி!

நீலக் கடலினிலே-நின்தன்
நீண்ட குழல் தோன்றுதடி!
கோல மதியினி லே-நின்தன்
குளிர்ந்த முகங் காணுதடி!
ஞால வெளியினி லே-நின்தன்
ஞான வொளி வீசுதடி!
கால நடையினி லே-நின்தன்
காதல் விளங்குதடி!

புதன்கிழமை வாழ்த்துக்கள்